கொரோனா அச்சுறுத்தாலால் ஒன்றரை வருடங்களாக வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்திருந்த பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார்.

கொரோனா அச்சுறுத்தாலால் ஒன்றரை வருடங்களாக வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்திருந்த பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார்.

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஒமைக்ரான் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்று 3 லட்சத்தை தாண்டியும், இங்கிலாந்தில் இரண்டு லட்சத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது.

மின்னல் வேகத்தில் மீண்டும் பரவிவரும் கொரோனாவால் பல்வேறு நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் விமான சேவைகள் மீண்டும் குறைக்கப்பட்டு வருகின்றன. கொரோனா முதல் அலை வீசத் தொடங்கியபோதும், உலகின் பல்வேறு நாடுகள் விமான சேவைகளை ரத்து செய்தன. கொரோனா பரவல் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுமார் ஒன்றரை ஆண்டுகள் வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்திருந்தார். இதேபோல், இந்தியாவிற்கு வருகைதர இருந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த பின்னர் உலக நாடுகள் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தியதால் விமான போக்குவரத்தும் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஷ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, இருநாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டார். இதையடுத்து இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கிறிஸ்தவ மத தலைவராக அறியப்படும் போப் பிரான்சிஸையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.

இந்தநிலையில் எதிர்வரும் புத்தாண்டில் பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகருக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவுக்கும் - ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடியின் பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனவரி 6-ம் தேதி துபாயில் நடைபெற்று வரும் துபாய் எக்ஸ்போ கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக எஃப்.டி.ஏ. எனப்படும் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட இருந்தது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் வர்த்தக உறவு இன்னும் வலுவடையும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் அமீரக பயணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.

Scroll to load tweet…

பிரதமராக பதவியேற்ற பின்னர், முதன் முதலில் கடந்த 2015-ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் இருமுறை அவர் துபாய்க்கு பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது நான்காவதாக திட்டமிடப்பட்ட பயணம் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டுள்ளது.