’’இந்தியா முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு முயற்சிகளை வலுப்படுத்த அனைவரையும் உற்சாகப்படுத்த வேண்டும்’’  மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட பலருக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்,  வாக்குப்பதிவை அதிகரிக்க மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனக்கோரி தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி பலருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ’’பல இளைஞர்கள் உங்களை பின்பற்றுகின்றனர். அவர்களை நீங்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க சொல்ல வேண்டிய நேரம் இது. 

 

இந்தியா முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு முயற்சிகளை வலுப்படுத்த அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். 2019 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் வர வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறோம். நமது ஜனநாயகத் துணிச்சலுக்காக வாகெடுப்பை உயர்த்த வேண்டும். என் சக இந்தியர்கள், இந்தியா முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு முயற்சிகளை வலுப்படுத்த அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்’’ என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இது குறித்து 10க்கும் அதிகமான பதிவுகளை பதிந்துள்ள அவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல், சரத் பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடகா முதல்வர் குமாரசாமி, உள்ளிட்டோருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சினிமா நடசத்திரங்கள், விளையாட்டு வீரர்களிடமும் இதுகுறித்து கேட்டுக் கொண்டுள்ளார்.