Asianet News TamilAsianet News Tamil

தமிழர்கள் நினைச்சதெல்லாம் நடக்குமாம் !! தமிழில் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன மோடி !!

Prime Minister Modi wishes tamil New year
Prime Minister Modi wishes tamil New year
Author
First Published Apr 14, 2018, 1:40 PM IST


தமிழர்களின் விருப்பங்களும், விழைவுகளும் ஈடேற வேண்டுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகர்களுக்கு தமிழில் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.ல்ழிழிழா

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதங்களில் சித்திரை மாதம்  முதல்நாள் தமிழ் புத்தாண்டாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த  கருணாநிதி தைத்திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து சட்டம் கொண்டு வந்தார்.

ஆனால் அதன்பின்  ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா, வழக்கம்போல் சித்திரை மாதம்  முதல்நாளை தமிழ் புத்தாண்டாக அங்கீகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

Prime Minister Modi wishes tamil New year

இந்நிலையில் பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக தனது  டுவிட்டரில் பதிவு செய்துள்ள அவர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம், நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை போன்றவைகள் வேண்டாம் என்பதே தமிழளின் விருப்பமாக இருந்து வருகிறது. இதேபோல்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் விருப்பமாக உள்ளது.

இப்படி தமிழர்களின் விருப்பங்கள் எதையுமே கண்டுகொள்ளாத மோடி தான் தற்போது தமிழர்கள் விருப்பங்கள் நடைபெற வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios