Asianet News TamilAsianet News Tamil

ஒரே அறிவிப்பில் அடித்து தூக்கிய மோடி..!! நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி..!!

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி நிவாரண நிதி வழங்கப்படும் ,தொழிலாளர்கள் விவசாயிகள் நடுத்தரக் குடும்பத்தின் நலனுக்காக 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து   நாளை மத்திய நிதியமைச்சகம் விளக்கமளிக்கும் என மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

prime minister modi speech
Author
Delhi, First Published May 12, 2020, 9:02 PM IST

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி நிவாரண நிதி வழங்கப்படும் , தொழிலாளர்கள் விவசாயிகள் நடுத்தரக் குடும்பத்தின் நலனுக்காக 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து   நாளை மத்திய நிதியமைச்சகம் விளக்கமளிக்கும் என மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி இவ்வாறு கூறியுள்ளார்.   மே-17 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில்,   மே-11ஆம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி விவாதித்தார் இந்நிலையில் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் , கொரோனா என்ற ஒரே ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கி விட்டது , இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் இந்த வைரசால் உயிரிழந்திருப்பது  வேதனை அளிக்கிறது ,  இது போன்ற உலகளாவிய ஒரு பொது முடக்கம் என்பது உலக மக்கள் இதுவரை  கண்டதில்லை,  கொரோனா வைரசுடன் நாம் தன்னம்பிக்கையுடன் போராடவும் வேண்டும் அதேநேரத்தில் முன்னேறவும் வேண்டும் ,  இந்தியா கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது ,  இந்தியா இந்த போராடத்தில்  உயிரிழப்பையும் தவிர்க்க வேண்டும் நாட்டின்   முன்னேற்றத்தையும் உறுதி செய்ய வேண்டும் ,  இந்தப் வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது .  கொரோனா வைரஸிலிருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது ,  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டி இருப்பதற்கு நாம் அனைவரும்தான் பொறுப்பேற்க வேண்டும் . 

prime minister modi speech

முன்பைவிட இன்னும் கூடுதலாக கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட நாம் தயாராக வேண்டும் ,  உலகம் முழுவதும் கொரோனாவால்  42 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் , ஆனாலும்  இந்திய மக்கள் கூடுதல்  உறுதியுடன் வைரஸ் தாக்குதலை சமாளிக்க வேண்டும் , வைரஸ்  பாதிப்புக்குப் பிந்தைய  உலகை இந்தியாதான் முன்னின்று நடத்த வேண்டும் , கொரோனா பெரும் தொற்று நீண்டகாலம் நம்முடன் இருக்கும் நான்காவது முறையாக  ஊரடங்கு நீடிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் எனவும்  நான்காவது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு மற்றவற்றில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்  தற்போது உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது ,  இந்தியாவிற்கு முக்கியமான வாய்ப்புகளை இந்த சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது , என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   வைரசுக்கு எதிரான போரில் இந்தியா முக்கிய கட்டத்தில் உள்ளது . இந்த வைரஸ் தாக்குதலுக்கு  முன்புவரை  இந்தியாவில் PPE உற்பத்தி கிடையாது ,  ஆனால் தற்போது நாளொன்றுக்கு இரண்டு லட்சம் வரை நாம் உற்பத்தி செய்கிறோம் , இப்படி  பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளி கொடுத்து வருகிறது . உலகம் என்பது ஒரே குடும்பம்தான் அதில் இந்தியாவிற்கு எப்போதும் சுயநலம் கிடையாது ,  தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் மூலம் இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் . 

prime minister modi speech

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி நிவாரண நிதி வழங்கப்படும் ,தொழிலாளர்கள் விவசாயிகள் நடுத்தரக் குடும்பத்தின் நலனுக்காக 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து   நாளை மத்திய நிதியமைச்சகம் விளக்கமளிக்கும் எனவும் வலிமையான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது  என்றும் கூறியுள்ளார், அதே போல்  நாட்டின் ஜிடிபியில் 10 சதவீதம் அளவு நிதி கொரோனாவையை எதிர்த்து போராட பயன்படுத்தப்படும் , ஜன்தன் ஆதார் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் தற்போது நமக்கு உதவுகிறது,  நாட்டில் கொரோனா பாதிப்பு முக்கிய உற்பத்தி துறைகளை ஆட்டம் காண வைத்திருக்கிறது மக்களின் உள்ளார்ந்த சக்தியை கொரோனா பாதிப்பு வெளிகாட்டி இருக்கிறது ,  உள்ளுர் சந்தைகள்  தேவைப்படும் அளவிற்கு பொருள்களின் விநியோகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் ,  முறையான முயற்சி இருந்தால் உள்ளூர் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் ஆக மாறும் , உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் அனைத்தும் இந்தியர்கள் பெருமையுடன் வாங்க வேண்டும் .  இந்தியா தனது கொள்கைகளால் உலகையே மாற்றி இருக்கிறது ,  இந்தியா தற்போது வளர்ச்சியின் பாதைக்கு திரும்பி உள்ளது.  உலகிற்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா ஆகும்
,இந்தியா சுயசார்பு டைய தேசமாக ஐந்து தூண்கள் வேண்டும் தற்சார்பு பொருளாதாரம் ,  உள்கட்டமைப்பு ,  ஜனநாயகம் ,  நவீன தொழில்நுட்பம் ,எரிசக்தி ஆகிய ஐந்து தூண்கள் அவசியம் என மோடி தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios