கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பாரத பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மாலை 5 மணி அளவில் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். இருபெரும் தலைவர்களை வரவேற்கும் விதமாக சென்னை மற்றும் மாமல்லபுரம் புதுப்பொலிவுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த 10 தினங்களுக்கு மேலாக வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.அப்போது  பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்நிலையில் அவர் ஹெலிகாப்டர் மூலம் கோவளம் புறப்பட்டுச் சென்றார். கோவளத்தில் இருந்து இன்று மாலை 4:30 மணிக்கு மாமல்லபுரம் செல்லும் அவர் 5 மணி அளவில் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு பகுதியில் ஜி ஜின்பிங் கை வரவேற்கிறார்.  இந்நிலையில் தமிழகம் வந்துள்ளது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில்,  சீனா அதிபர் ஜின்பிங்கை சந்திக்க தமிழகம் வந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்,  சீனா அதிபர் ஜின்பிங்கை தமிழக வரவேற்பது மகிழ்ச்சி,  இதன் மூலம் சீனா- இந்தியா இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என்றும்,  கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  என்ன அவர்கள் கருத்து பதிவிட்டுள்ளார்,  அவரின் இக் கருத்து தமிழக மக்களை பெருமைப்படுத்தும் வகையில் உள்ளது.