தன்னைப்பற்றி மீம்ஸ் வெளியிடுபவர்களுக்கு  மோடி தன்னுடைய பாணியில் அளித்துள்ள பதில்  சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது டுவிட்டரில் மோடியிடம் கருத்து தெரிவித்த ஒருவர்,  உங்கள் படத்தை வைத்து அதிகளவில் மீம்ஸ் செய்யப்படும் என கூறியிருந்தார் ,  அதற்கு பதிலளித்த பிரதமர் உங்களை நான் வரவேற்கிறேன் மகிழ்ச்சியாக இருங்கள் என பதிலளித்துள்ளார். 

இந்த ஆண்டின் சூரிய கிரகணத்தை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அதற்குரிய உபகரணங்களுடன் ஆர்வத்துடன்  கண்டு ரசித்தனர் ,  இந்நிலையில் பிரதமர் மோடியும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை பார்வையிட்டார் ,  அதற்கான புகைப்படங்களும்  சமூகவலைதளத்தில் வெளியானது ,  இந்நிலையில் மோடியின் அந்த புகைப்படங்களை  மேற்கோள் காட்டிய ஒருவர் ,  இப்போது இந்த புகைபடங்களை வைத்து மீம்ஸ் தாயாரிக்கப்படும்  என தெரிவித்தார் .  அதற்குப் பதிலளித்த பிரதமர் உங்கள் மீம்ஸ்களை வரவேற்கிறேன்,  மீம்ஸ் போட்டு மகிழுங்கள் என பதிலளித்திருந்தார்.

அத்துடன்,  மற்ற இந்தியர்களை போலவே  நானும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தேன் என்றும்  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .  அதேவேளையில் இங்கு  அதிக மேகமூட்டம் இருந்ததால் சரியாக பார்க்க முடியவில்லை ,  ஆனால் கோழிக்கோடு மற்றும் பிற பகுதியில் காணப்பட்ட சூரிய கிரகணத்தை நேரடியாக ஸ்ட்ரீம் மூலம் பார்த்தேன் அத்துடன் அது குறித்து நிபுணர்கள் ஆலோசனை செய்தேன் என அவர் தெரிவித்திருந்தார் பிரதமரின் இந்த பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.