இந்தியாவில் கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நம் நாட்டிற்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.இதை நினைவு கூர்ந்து பாஜகவின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Scroll to load tweet…

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்.."45 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக போராடிய மற்றும் சித்ரவதைகளை எதிர்கொண்ட மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தை ஒருபோதும் நாடு மறக்காது" என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நெருக்கடி நிலை குறித்து அவர் பேசியது தொடர்பான காணொலி ஒன்றையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.