மான் கீ பாத்  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிப் பேசியது, எங்களுக்குப் பெருமையாக உள்ளது என்று சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா தெரிவித்துள்ளார்.


மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். முழு ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நெல்லைத்தோப்பு முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்கள் சிலர் மோகன் வீட்டிற்கு வந்து புலம்பியிருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு வழியின்றி குரலற்றவர்களாக புலம்பியதைக் கண்டு, மோகன் அரிசி மளிகைசாமான் காய்கறிகளை கொடுத்து அந்த மக்களுக்கு உதவிகளை செய்து வந்தார்.

அதனையடுத்து, தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்த போது, அவரது மகள் நேத்ரா அந்த பணத்தை எடுத்து உதவி செய்யுமாறு கூறிய பெருந்தன்மைதான் அனைவராலும் பாரட்ட வைத்துள்ளது.5லட்சம் மொத்த பணத்தையும் எடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார் மோகன். அதனையடுத்து, மோகனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்துவந்தனர். குறிப்பாக, நடிகர் பார்த்திபனும் பாராட்டு தெரிவித்திருந்தார். 

இதேபோல் அகர்தலாவை சேர்ந்த கவுதம் தாஸ், பதன்கோட்டை சேர்ந்த திவ்யங் ராஜூ, நாசிக்கை சேர்ந்த ராஜேந்திர யாதவ், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியோரின் சேவைகளும் பாராட்டுக்குரியவை. நாடு சந்தித்திருக்கும் இக்கட்டான சூழலில் பல்வேறு புதுமைகள் நிகழ்த்தி வரும் விஷயங்கள் மனதை தொடும் வகையில் அமைந்துள்ளன என்றார் பிரதமர் மோடி.
மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா பேசும் போது.." என்னுடைய இலட்சியம் ஐஏஎஸ் ஆவதே. ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம் என்றார்.