கொரோனா சிகிச்சைக்காக சுமார் ஐந்தாயிரம் கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் , அடுத்த  21 நாட்களுக்கு  தேசிய ஊரடங்கு  அமலில் இருக்கும் எனவும்  அவர் அறிவித்துள்ளார்.  ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன . இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவித்திருந்த நிலையில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.  21 நாட்கள் தேசிய ஊரடங்கு  நடைமுறையில் நடைமுறையில் இருக்கும் என  . அவர் அறிவித்தார். 

நாட்டு மக்களின் உயிரை காப்பாற்ற இந்த ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுகிறது என்ற அவர் ,  நாட்டு மக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.  தனிமைப்படுத்துதல் மட்டுமே மக்களை காப்பாற்றும் ஒரே வழி என அவர் தெரிவித்தார்.  நாட்டின் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு சுமர் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார் .  தேசிய அளவிலான ஊரடங்கு இன்று இரவு 12 மணி முதல் அடுத்து வரும் 21 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளார் .  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனாவை எதிர்த்துப் போராட தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர் .  கொரோனாவை தடுக்க அடுத்த மூன்று வாரங்களுக்கு சமூக விலகல் மிக முக்கியம் என தெரிவித்தார் .  மத்திய மாநில அரசுகள் என்ன சொல்கிறதோ அதை அலட்சியப் படுத்தாமல் கேட்க வேண்டுமென பிரதமர் மோடி கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை வைத்துள்ளார் . 

ஊரடங்கும் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் கூட மக்களின் உயிர் முக்கியம் என தெரிவித்த அவர் நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் உயிரும் தனக்கு  முக்கியம் எனக் கூறினார் .  அதேபோன்று சுமார் 24 மணி நேரமும் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர் .  மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் நாம் அழிவை நோக்கி செல்ல வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார் .  நீங்கள் வெளியில் சென்றால் கொரோனா வீட்டுக்குள் வரும் என தெரிவித்த அவர் கொரோனா காட்டுத் தீ போல பரவி வருகிறது என்றார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது . 

இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவைக் கொண்டு கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .  அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை  100 சதவீதம் கட்டுப்படுத்த முடியும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது சிறந்த பாதுகாப்பாக இருக்கும் .  அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே இதில்  திணறி வரும் நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகள் மிக மிக கவனமுடன் இருக்க வேண்டும் .  அரசின் சொல்படி கேட்டு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .  ஏற்கனவே அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் கொரோனா தீவிரம் அதிகமாகியுள்ள நிலையில் இரண்டாவது முறையாக மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது .