Asianet News TamilAsianet News Tamil

ஆயோத்தியில் பிரதமர் மோடி..!! மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் இந்துக்கள்..!!

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்தார்.  அவருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Prime Minister Modi in Ayodhya,  Hindus in flood of happiness
Author
Delhi, First Published Aug 5, 2020, 11:35 AM IST

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்தார். அவருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மொத்த அயோத்தி நகரமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில்  அடிக்கல் நாட்டுவதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட மோடி, திட்டமிட்டபடி காலை  10:30 மணிக்கு லக்னோ வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார். அங்கு அனுமன் கோவிலுக்கு சென்ற அவர், அங்கே சாமி தரிசனம் முடித்துவிட்டு ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். 12:30 மணிக்கு விழா தொடங்க உள்ள நிலையில், மோடியுடன் சேர்த்து  4 பேர் மட்டுமே மேடையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் நிகழ்ச்சி முடித்து 1 மணிக்கு கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர் 2 மணியளவில் லக்னோ புறப்படும் அவர் 2:20 மணிக்கு லக்னோவில் இருந்து டெல்லி புறப்படுகிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Prime Minister Modi in Ayodhya,  Hindus in flood of happiness

கடந்தாண்டு நவம்பர் மாதம் 9-தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது, கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதேபோல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்திரப்பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்திற்கு ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.  இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது, அறக்கட்டளையின் மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று  பாரத பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலுக்கு அஸ்திவாரம் போட உள்ளார். இது இந்துக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் ஆரவாரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காலை 9:30 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்ட மோடி 10.30 க்கு லக்னோ வந்தடைந்தார். 

Prime Minister Modi in Ayodhya,  Hindus in flood of happiness

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி  வந்த அவர், அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மொத்த அயோத்தி நகரமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதில் வெறும் 175 பேருக்கு மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 135 பேர் ஆன்மிகத் தலைவர்கள் ஆவர், அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி,  ஆனந்திபென் படேல், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கோயில் அறக்கட்டளை  நிர்வாகி நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அயோத்திக்கு பிரதமர் மோடி வருகையையொட்டி, நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விழா நடக்கும் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதற்காக 40 கிலோ வெள்ளி செங்கல் தயார் நிலையில் உள்ளது. தற்போது அடிக்கல் நாட்டு விழா அயோத்தியில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios