பாஜகவின் மூத்த தலைவரான அத்வானியை பிரதமர் மோடி மதிக்காத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், பிரதமர் மோடிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. புதிய முதல்வராக பிப்லாப் தேப் நேற்று பதவியேற்று கொண்டார்.

இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அனைவரும் மேடையில் அமர்ந்திருந்தபோது பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் பதிலுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார் பிரதமர் மோடி.

ஆனால், பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி கையெடுத்து கும்பிட்டபோது, பதிலுக்கு வணக்கம் செலுத்தாததோடு அவரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார் பிரதமர் மோடி. இதனால் மனமுடைந்த அத்வானியின் முகம் சுருங்கி, வேதனையோடு அமர்ந்தார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> Agartala: Former Tripura CM Manik Sarkar and PM Narendra Modi meet at swearing ceremony of Biplab Deb and others <a href="https://t.co/89QtBYkeVm">pic.twitter.com/89QtBYkeVm</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/972008180426436608?ref_src=twsrc%5Etfw">March 9, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

பாஜகவின் மூத்த தலைவரான அத்வானியை பிரதமர் மோடி மதிக்காமல் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. பிரதமர் மோடியின் மதிக்க தெரியாத குணத்தையும் பிரதமர் மோடியையும் சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.