புயல் சேதத்தை பார்வையிட மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்ற பாரதப் பிரதமர் மோடி பசிரத் பகுதியில் ஆய்வு நடத்தியபோது பிரதமரிடம் இருந்து விலகி புல்தரையில் நின்ற மாநில முதலமைச்சர் மம்தா மற்றும் மாநில ஆளுநரை ஏன் மண்தரையில் நிற்கிறீர்கள் என பிரதமர் கேட்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது . அதிதீவிர புயலாக உருவெடுத்து ஆம்பன் புயல் கடந்த 20ஆம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்பகுதியில் கரையை கடந்தது .  இதனால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பர்கனாஸ் மாவட்டம் முற்றிலும் சேதமடைந்தது .  மேற்கு வங்கத்தில் மற்ற சில மாவட்டங்களும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன,  , பர்கனாஸ் மாவட்டத்தில் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கின , அந்த பகுதி முழுவதும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது,  அதேநேரத்தில் ஒடிசாவிலும் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. 

இந்த புயலால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்,  கொல்கத்தா, பர்கனாஸ், கிழக்கு மிட்னபூர், ஹூக்ளி, ஹவுரா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம், செல்போன் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  லட்சக்கணக்கான வீடுகள் பாலங்கள் தொழிற்சாலைகள் ஆகியவை புயல் காற்றால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளன. இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  புயலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது,  புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக கடந்த 22ஆம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா விரைந்தார். பிரதமர் மோடியை மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தன்கரும், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தாவும் வரவேற்றனர்,  பின்னர் மூவரும் ஹெலிகாப்டர் மூலம் புயலால் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.  வான்வெளி ஆய்வைத் தொடர்ந்து ,  வடக்கு 24-பர்கனாசின் பசிரத் பகுதியில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன், புயலால் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும்,  மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட பேரிடருக்கு , இடைக்கால நிவாரணமாக 1000 கோடி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.  இந்த நெருக்கடியான சோதனையிலும்  மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு துணிவுடன் அனைத்தையும் எதிர்கொண்டுள்ளது என அவர் பாராட்டினார்.  பின்னர் அவர் அங்கிருந்து ஒடிஷா புறப்பட்டுச் சென்றார்.  முன்னதாக பிரதமர் மோடியை கொல்கத்தா விமான நிலையத்தில் வரவேற்ற மம்தாவும், மாநில ஆளுநர் ஜெக்தீப் தன்கரும் சமூக இடைவெளியை பின்பற்றினர்,  முகக்கவசம் அணிந்து வந்த அவர்கள் பிரதமரை வரவேற்க கைகுலுக்கவும் , மலர்கொத்து வழங்கவும் இல்லை,  அவருக்கு வணக்கம் மட்டும் தெரிவித்தனர். அதேபோல் பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்திருந்தார்.

 

பின்னர் பசிரத் பகுதியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஆறடி சமூக இடைவெளி விட்டு நின்றனர் ,  பிரதமர் மோடி செங்கல் பரப்பிய தரையில் நிற்க , மம்தாவும் ஆளுநரும் புல்தரையில் நின்றனர்.  அதைப்பார்த்த பிரமதர் எதேச்சேயாக அவர்களிடம்,  ஏன் இத்தனை இடைவெளி விட்டு மண்தரையில் நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார், அதற்கான புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.  பிரதமரின் கேள்விக்கு  என்ன பதில் சொல்வது என தெரியாமல் மம்தா திகைப்பது போன்று அந்த புகைப்படம் அமைந்துள்ளது.  பிரதமர் மிக மென்மையாகவே அவர்களை  அப்படி கேட்டதாக தெரிகிறது.  மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் குறிப்பாக அதை எதிர்ப்பதில் முதல் ஆளாக நிற்கும் மம்தா பானர்ஜி தொடர்ந்து பிரதமரையும்,  பாஜக முக்கிய அமைச்சர்களையும் வேண்டுமென்றே கடுமையாக விமர்சித்து வரும் நிலையில்,  மம்தா அந்த இடத்தில் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டுமென்றே  இப்படி நடந்து கொண்டிருக்கிறார் என நெட்டீசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.