premalatha will become dmdk speaker

தேமுதிகவில் விரைவில உட்கட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து பிரேமதலா, அவை தலைவராக அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவால் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், கட்சி பணிகளும், ஆட்சி பணிகளும் ஸ்தம்பித்து நின்றன.

இதைதொடர்ந்து கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். பின்னர் 2 பேர் முதலமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஆட்சி அமைத்து ஒரே ஆண்டில் 3 முதலமைச்சர்கள் வந்துவிட்டன.

இதற்கிடையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்படுகின்றன. ஆனால் அதிமுகவின் பொது செயலாளர் யார்...? அவைத் தலைவர் யார்...? இவர்களின் பஞ்சாயத்து தேர்தல் ஆணையம் வரை சென்றுவிட்டது.

அதிமுகவின் பஞ்சாயத்தை முடித்து வைத்த பிறுகு, உட்கட்சித் தேர்தலுக்கான வேலையில் அதிமுகவினர் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் உட்கட்சி தேர்தலை நடத்தினால், உள்ளாட்சி தேர்தலில் சுலபமாக வெற்றி பெறலாம் என அனைத்து கட்சியினரும் முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி, உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது எளிதில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தில், சில மாதங்களுக்கு முன்னதாவே திமுக அதை செய்து முடித்து விட்டது. 

கடந்த முறை தே.மு.தி.கவை எதிர்க்கட்சி அந்தஸ்துடன் நகர்த்திக் கொண்டு போன விஜயகாந்தும், உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து உட்கட்சித் தேர்தலை முடிக்கும் வேகத்தில் களத்தில் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. ஓரிரு நாட்களில் மாவட்ட, பகுதி, வட்ட, கிளை, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு செயலாளர்கள் மற்றும் பிற அணிச்செயலாளர்கள் தேர்வு செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

அதன்படி உட்கட்சி தேர்தல் நடத்தி, கட்சியின் அவைத்தலைவராக பிரேமலதா நியமனம் செய்யப்பட இருப்பதாக அவர் கூறினார்.