Asianet News TamilAsianet News Tamil

நிருபர்களை நீ... வா... போ... என கேவலமாக பேசிய பிரேமலதா... ஆணவத்தின் உச்சம்..!

நீ... வா... போ... என நிருபரை தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஒறுமையில் கேவலமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Premalatha who strangled the reporters
Author
Tamil Nadu, First Published Mar 8, 2019, 1:41 PM IST

நீ... வா... போ... என நிருபரை தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஒறுமையில் கேவலமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கூட்டணி அமைப்பதில் ஊசலாட்டம் கண்டு வருகிறது தேமுதிக. ஒரே நேரத்தில் இரு முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தேமுதிக எடுத்த முயற்சி அம்பலமான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுகவுடன் கூட்டணிக்கு தூது சென்ற விவகாரம் குறித்து நேற்று தேமுதிக துணைபொதுச்செயலாளர் சுதீஷ் விளக்கமளித்திருந்தார். ஆனாலும் இந்த விவகாரம் அடங்காததால் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கமளிக்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். Premalatha who strangled the reporters

மகளிர்தினத்தில் ஃபுல் மேக்-அப்பில் வந்த அவர் செய்தியாளர்களை பார்த்து ஒவ்வொருவராக கேள்வி கேளுங்கள். தம்பி... நீ புதியதலைமுறையா..? உன் பெயர் ஆனந்தா..? கூட்டணியில் இழுபறியான்னு நீதானே கேள்வி கேட்ட..? என ஒருமையில் கேவலமான முகபாவத்துடன் பேசினார்.  

துரைமுருகன் பற்றி கேள்வி எழுப்பிய நிருபரை, உனக்கு காரணம் தெரியணுமா? அங்கே போய் கேளு.. இங்கே வந்து ஏன் கேட்குற என அவமானப்படுத்தினார். எல்.கே.சுதீஷ் மிரட்டப்பட்டதால் ப்ரஸ் மீட் வைத்தாரா? என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, இங்கபாரு... நாங்க யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்ல.. நீ இப்படி ஒரு கேள்விகாட்குற.. என பதிலளித்து வெறுப்பேற்றினார். Premalatha who strangled the reporters

நீங்க என் வீட்டு கேட் முன்னாடியும், கட்சி தலைமை அலுவலக வாசல் முன்னாலயும் வந்து நின்னா நாங்க கூட்டணியை அறிவிச்சிடணுமா? என நிருபர்களை அவமானப்படுத்தும் விதமாக அவர் நடந்து கொண்டார். அதிமுகவுடன் கூட்டணி ஏன் என விளக்கம் அளிக்க பாமக அன்புமணி வைத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்கள் கேட்ட கேள்வியை எதிர்க்கொள்ள இயலாமல் நிருபர்களை தரக்குறைவாக நடத்தினார். அதே போல் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களை அவமானப்படுத்தும் விதமாக ஒறுமையில் பேசினார்.Premalatha who strangled the reporters

அரசியல் கட்சிக்கு தலைமைவகிக்க கூடிய நிர்வாகிகள் சமூகத்திற்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் செய்தியாளர்களை இப்படி தொடர்ந்து அவமானப்படுத்துவது அதிகரித்து வருகிறது. செய்தியாளர்களுக்கே இந்த மரியாதை என்றால் தொண்டர்களையும் பொதுமக்களையும் இவர்கள் எப்படி மதிப்பார்கள்..? இவர்களது லட்சணம் இவ்வளவு தானா? என பொதுமக்கள் அதிருப்தியாகி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios