பழைய விஜயகாந்தை மீண்டும் தமிழகம் பார்க்கும் எனவும் அப்போது கேப்டன் யார், அவரது தொண்டர்கள் யார் என்பதை அனைவரும் பார்ப்பார்கள் எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்று கமல் கட்சி ஆரம்பித்து விட்டார். அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கும் தெரியவில்லை. கேட்பவர்களுக்கும் தெரியவில்லை.

ஏற்கனவே விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். அவர் இப்போது எப்படி இருக்கிறார்? என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். தற்போது பல நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் பதவிக்கு கனவு காணுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், விஜயகாந்த் போன்று காணாமல் போவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசியிருந்தார்.

இந்நிலையில், பழைய விஜயகாந்தை மீண்டும் தமிழகம் பார்க்கும் எனவும் அப்போது கேப்டன் யார், அவரது தொண்டர்கள் யார் என்பதை அனைவரும் பார்ப்பார்கள் எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.