கிழியாத சட்டையை கிழித்து, வாங்க வாங்க என்று போட்டோ எடுக்கும் கட்சி தேமுதிக இல்லை...!

திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி என பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கிழியாத சட்டையை கிழித்து, வாங்க வாங்க என்று போட்டோ எடுக்கும் கட்சி தேமுதிக இல்லை என்று கூறினார்.

Premalatha Vijayakanth press meet

திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி என பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கிழியாத சட்டையை கிழித்து, வாங்க வாங்க என்று போட்டோ எடுக்கும் கட்சி தேமுதிக இல்லை என்று கூறினார். 

சென்னையில் கோயம்பேட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் ஆரம்ப காலத்தில் இருந்து, திமுக என்பது தில்லு முல்லு கட்சி என்பதை நான் உரத்த குரலில் சொல்லி வருகிறேன். அரசியல் ரீதியாக தேமுதிகவை திமுக பழிவாங்குகிறது.

 Premalatha Vijayakanth press meet

கருணாநிதியை உடல்நிலை பாதிக்கப்பட்ட போது சந்திக்க விஜயகாந்த் அகுமதி கேட்டார். ஆனால் ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை, ஆனால் விஜயகாந்தை சந்திக்க ஸ்டாலினுக்கு நாங்கள் அனுமதி அளித்தோம். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க வந்த போது அரசியல் பேசவில்லை என ஸ்டாலின் வெளிப்படையாக கூறினால், அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். Premalatha Vijayakanth press meet

திமுக பொருளாளர் துரைமுருகன் தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த் அவர் பேசியது முற்றிலும் உளறல். தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்த பிறகு யாராவது கூட்டணி குறித்து பேசச் செல்வார்களா? என கேள்வி எழுப்பினார். தூக்க கலக்கத்தில் பேசியதாகவே கருகிறேன் என துரைமுருகனை கடுமையாக விமர்சித்துள்ளார். கிழியாத சட்டையை கிழித்து, வாங்க வாங்க என்று போட்டோ எடுக்கும் கட்சி தேமுதிக இல்லை என மு.க.ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios