தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொது செயலாளர் விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தேமுதிக தொடங்கி பதினான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தேமுதிக மகளிர் அணி தலைவியாக இருந்த பிரேமலதா, பொருளாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

தேமுதிகவின் பொது செயலாளராக இருக்கும் விஜயகாந்த், தற்போது மீண்டும் அக்கட்சியின் தலைவராகவும், நிரந்தர பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவைத் தலைவராக இளங்கோவனும், கொள்கை பரப்புச் செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜூம் நியமனம் செய்யப்பட்டனர்.