பிரேமலதா உடனான செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர்களை ஒருமையில் பேசியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

தேமுதிகவின் கொள்கை தான் என்ன..? என செய்தியாளர் கேட்டகேள்விக்கு, கொள்கை இல்லை என உனக்கு யார் சொன்னது..? என செய்தியாளர்களை ஒருமையில் பேசினார் பிரேமலதா. இதற்கிடையில், என்ன கேள்வி கேட்டாலும், "எங்களை பற்றி பேசுவதாக இருந்தால் என்கிட்டே கேளு...மற்றவர்களை பற்றி பேச வேண்டும் என்றால் அங்க போயி கேளு என ஒருமையில் பேசினார் 

இதுவரை கேள்வி கேட்காதவர்கள் யாரேனும் கேள்வி கேளுங்கள்... கேள்வி கேட்டவர்களே திரும்ப திரும்ப கேட்க வேண்டாம் என உத்தரவிடும் பாணியில் பேசினார் பிரேமலதா. பிரேமலதாவின் இந்த ஆணவ பேச்சை கேட்டு செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அடுத்த நிமிடமே வேறு கேள்விகளை கேட்க தொடங்கினர். பிரேமலதா பேசிய பேச்சுக்கு ஒரு செய்தியாளர் கூட புறக்கணிப்பு செய்யாமல் அமர்ந்த இடத்தில் இருந்து கொஞ்சம் கூட நகராமல், சாதாரணமாக கேள்வி கேட்க தொடங்கினர்.

இதெல்லாம் செய்தியாளர்களுக்கு எவ்வளவு பெரிய அசிங்கம்? இதற்கெல்லாம் பதில் சொல்லுமா மற்ற தொலைக்காட்சி சேனல்கள்..?இந்த அளவிற்கு தரக்குறைவாக நடத்தும் அளவிற்கு தான் செய்தியாளர்கள் உள்ளார்களா..? அல்லது செய்தியாளர்களுக்கு இவ்வளவு தான் மரியாதையா...? 

இதற்கு முன்னதாக, கேப்டன் விஜயகாந்த் எப்போது செய்தியாளர்களை சந்தித்தாலும், அதில் ஒரு விறுவிறுப்பு இருக்கும். நேரலை தொடங்கும் போது, தொடர்ந்து சில சப்தம் போட்டாலோ அல்லது செய்தியாளர்களில் யாராவது பேசிக்கொண்டு இருந்தாலோ... "உஷ்" என சைகை காண்பிப்பார். இல்லை நாக்கு கடித்து கோபத்தை வெளிப்படுத்துவார். 

மற்றொரு தருணத்தில்.. "நீங்கெல்லாம் ஒரு பத்திரிக்கியாளர்களா..? தூ...என ஒரு முறை பேசி இருந்தார் விஜயகாந்த் மீண்டும் மீண்டும் இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதை யாரும் மறந்து இருக்க முடியாது. ஆனால், தற்போது விஜயகாந்த் உடல் நலம் காரணம் காட்டி பிரேமலதா மற்றும் சுதீப் அவ்வப்போது செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றனர்.

விஜயகாந்துக்கு கோபம் வந்தால் வெளிப்படுத்தும் விதம் தனி விதம்... பிரேமலதாவிற்கு கோபம் வந்தால்,செய்தியாளர்களை இவ்வளவு தரக்குறைவாக நடத்துவார் என்பது வேறு விதமா..? இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம்...?