Asianet News TamilAsianet News Tamil

அரசின் தவறை மறைக்கவே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு பிரேமலதா குற்றச்சாட்டு

அரசின் தவறை மறைக்கவே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டி உள்ளார்.

Premalatha condemned the government's decision to compensate those who died after drinking liquor
Author
First Published May 16, 2023, 12:37 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி கீழ் புறத்தில் தேமுதிக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசுகையில், மரக்காணம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்ததுள்ளனர். 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கஞ்சா, டாஸ்மாக், மதுபானம், தானியங்கி மது இயந்திரம் இருந்த நிலையில் தற்போது கள்ள சாராயம் என  ஒட்டுமொத்த தமிழகத்தை போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு. 

இதுதான் திராவிட மாடல் ஆட்சி. கடந்த ஆட்சியில் குடி பழக்கத்தால் விதவைகள் அதிகரிப்பதாக கனிமொழி தெரிவித்தார். ஆனால் திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில்  இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவந்தது போல் மது, கஞ்சா, உள்ளிட்டவற்றை உடனடியாக ஒழிக்க வேண்டியது திமுக அரசின் வேலை. 

இந்து மகாசபா மாநில இளைஞரணி தலைவரை கொல்ல சதி? காவலாளியை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்

கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது திமுக அரசின் தவறை மறைக்கும் செயல். கள்ளசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கியதை தேமுதிக கண்டிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு  75 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் . அப்போது தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்த அரிய வகை உயிரினம் பத்திரமாக மீட்பு

Follow Us:
Download App:
  • android
  • ios