நடந்து முடிந்த தேர்தல், அதிமுக கூட்டணிக்கு சோதனையாக இருக்கலாம், ஆனால் அடுத்து வரப்போகும்  உள்ளாட்சி தேர்தலில், நாங்க அமோக வெற்றி பெறும் என, தேமுதிக பொருளாளர், பிரேமலதா அனல்பறக்க பேசியுள்ளார்.

நேற்று சென்னை, கோயம்பேடில் உள்ள, தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த் தலைமையில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், அதிமுக சார்பில் மீன்வளத்துறை அமைச்சர்,ஜெயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்; அதிமுக - தேமுதிக கூட்டணி, 2011ல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்போது, ஜெயலலிதாவும், விஜயகாந்தும் இணக்கமாக இருந்து, சட்ட சபையை நடத்தினர். எதிர்க்கட்சிகள் மற்றும், ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் செய்த சூழ்ச்சியால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு, கண் திருஷ்டியே காரணம் என்றார். 

அடுத்ததாக பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா; அதிமுக - தேமுதிக கூட்டணி, கடவுளை நம்பும் கூட்டணி. கடவுளே இல்லை என்பவர்கள், திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவர். வெளியூர் செல்லும் போது, பொட்டு வைத்துச் செல்வர் என திமுக தலைவர் ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்துத் தள்ளினார். தொடர்ந்துப் பேசிய அவர், நடந்து முடிந்த தேர்தல், அதிமுக, கூட்டணிக்கு சோதனையாக இருக்கலாம், உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெறும் என்றார்.