precaution nipah virus
கேரளா மாநிலம் கடற்கரை ஒட்டியுள்ள கோழிக்கோடு பகுதியில் பன்றிகள் மூலமாக பரவு நிபா வைரஸினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. மிக அரிதாக காணப்படும் இவ்வகையான வைரஸ் தற்போது கேரளாவைத் தவிர வேறு மாநிலத்துக்கும் பரவவில்லை எனத் தெரிகிறது.

இந்த வைரஸ் மூலம் பரவு நோயை எப்படி குணப்படுத்துவது எனத் தெரியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சாதாரண காய்சலால் வருபவர்களின் ரத்த மாதிரிகள் கூட பூனேவில் உள்ள ‘நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் வைராலஜி’ க்கு அனுப்பப்பட்டு உறுதி செய்யப்படவுள்ளன.
இதனால் கேரளா மாநிலம் முழுவதும் நலத்துறை அமைச்சர் கே.கே சைலஜா மாநிலம் முழுவதற்குமான சுகாதார கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட அளவில் சிறப்பு மருத்துவகுழு கோழிக்கோடு ஆட்சியர் மூலம் அமைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார் ஆட்சியிர் யூ.வி. ஜோசப்

மத்திய சுகாதாரக் குழு கேரளா மாநிலத்துக்கு விரைந்துள்ளது.
அறிகுறிகள்
நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சலும் மூச்சுவிடுவதில் சிரமும்,இரத்த அழுத்தமும் குறையத்தொடங்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் கடுமையான தலைவலியும் 15 நாட்களுக்குப் பின் மூளைக்காய்ச்சலாக மாறவும் செய்கிறது.
செய்யகூடாதது என்ன?
.jpg)
மரங்களிலிருந்து விழும் பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும், பதப்பட்த்தப்படாத கள்ளை குடிக்கவேண்டாம். பன்றிகளின் வளர்ப்பு இடங்களை சுத்தமாக பாதுகாக்கவேண்டுமென கூறியுள்ளது
தடுப்பு மருந்துகள்
இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறிப்படவில்லை மாறாக பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலை எதிர்க்க தேவையான சப்போர்ட்டிக் தெரபி கொடுப்பதினால் பாதிப்பின் அளவை கட்டுப்படுத்தலாம்.
தமிழகத்தில்…?
இது குறித்து சுகாதாரத்துரை செயலாளர் ராதாகிருஷ்ணன் தேவையற்ற பீதி வேண்ட்டாம் எனக் கூறியவர் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் கூடுதல் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட சுகாதாரத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றார்.
