Asianet News TamilAsianet News Tamil

பிரசாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு... பரபரக்கும் வடமாநிலங்கள்... பாஜகவுக்கு எதிராக அதிரடி..!

அமரீந்தர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், பிரசாந்த் கிஷோரும் தனது அடுத்த நடவடிக்கை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். 
 

Prashant Kishor Resigns As Principal Advisor To Punjab Chief Minister
Author
Delhi, First Published Aug 5, 2021, 11:32 AM IST

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பதவியிலிருந்து பிரசாந்த் கிஷோர் பதவி விலகினார்.

அமரீந்தர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், பிரசாந்த் கிஷோரும் தனது அடுத்த நடவடிக்கை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். 

அதில், "என்னைப்பற்றி நீங்கள் அறிவீர்கள். பொது வாழ்க்கையில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுப்பதற்கான எனது முடிவின் அடிப்படையில், உங்கள் முதன்மை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. ஏனெனில் எனது எதிர்கால நடவடிக்கை குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்ள நான் எழுதுகிறேன், ”என கிஷோர் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

 Prashant Kishor Resigns As Principal Advisor To Punjab Chief Minister

அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பே அம்ரீந்தர் சிங், பிரசாந்த் கிஷோரின் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. 
முன்னதாக அம்ரீந்த்ர் சிங், பிரசாந்த் கிஷோரின் வருகை குறித்து,’’"என்னுடைய முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் என்னுடன் சேர்ந்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றாக பணியாற்ற எதிர்நோக்குங்கள்!" எனக் கூறியிருந்தார். பஞ்சாபில் பிரசாந்த் கிஷோருக்கு அமைச்சரவைக்கு ஈடான அந்தஸ்து வழங்கப்பட்டது.Prashant Kishor Resigns As Principal Advisor To Punjab Chief Minister

ஆனால், இந்த ராஜினாமா முடிவெடுத்ததற்கு பின்னால், வேறொரு விஷயம் இருக்கிறது என பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. "முழு கவனமும் 2024ல் மக்களவை தேர்தலில் இருக்கும்போது மாநிலத் தேர்தல்களில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் படைகளை இணைப்பதற்காக பிரசாந்த் கிஷோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். Prashant Kishor Resigns As Principal Advisor To Punjab Chief Minister

வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் வெற்றிக்கு பிறகு, 2024 மக்களவை தேர்தலில் பிஜேபியை எதிர்கொள்ள எதிர் கட்சிகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம், அவர் ராகுல் காந்தி, சோனொயா காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்தார், 2024 பிரச்சாரத்தில், ஒரு ஆலோசகராகவோ அல்லது காங்கிரசின் உறுப்பினராகவோ, மிகவும் சுறுசுறுப்பாக பங்கு வகுக்க திட்டமிட்டுள்ளார்.  வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும் டெல்லியில் கிஷோர் சந்தித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios