கணையம் பிரச்சனை தொடர்பாக கோவா  முதல்வராக இருந்த  மனோகர் பாரிக்கர் மறைவிற்கு பிறகு தற்போது புதிய முதல்வராக பா.ஜ வின் பிரமோத் சாவந்த் உள்ளார்.

இந்த நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, கவர்னர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் எழுதினார் பிரமோத். பின்னர் இன்று காலை 11.30 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டத்தில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். கோவா சட்ட மன்றத்தில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பிரமோத் சாவந்த் அரசுக்கு ஆதரவாக 20 பேரும், எதிராக 15 பேரும் ஓட்டளித்தனர். 

எதிராக வாக்களித்தவர்களில் 14 பேர் காங்கிரஸ் மற்றும் 1 தேசிய வாத காங்கிரஸ்கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை  நிரூபித்து உள்ளதால், கோவாவில் பாஜக ஆதரவு பிரமோத் முதல்வராக தொடர்வார்.