பெரிய மனிதர் என நம்பி வீட்டுக்குப் போனால் வரச்சொல்லி விட்டு இப்படித்தான் கேவலப்படுத்துவீங்களா? என திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பிரேமலதா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

துரைமுருகன் வீட்டிற்கு தேமுதிக நிர்வாகிகள் சென்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’திமுக பொருளாளர்ருக்கு தேமுதிக பொருளாளராக நான் பதில் சொல்கிறேன். ஒரு எதிரியே வீட்டுக்கு வந்தாலும் அவர்களை வரவழைத்து உபசரித்து அனுப்புவதுதான் தமிழர் பண்பாடு. ஏதோ ஒரு காரணுக்காக அவர்கள் என்றே வையுங்கள். நீங்கள் வயசுல மூத்தவர்தானே. அவங்க உள்ளே போகும்போது எந்த ப்ரஸும் வெளியே இல்லையாம். 

அவங்க வெளியே வரும்போது ஒட்டுமொத்த ப்ரஸும் எப்படி வந்தாங்க? உங்களை பெரிய மனிதரா நம்பிதானே உங்கள் வீட்டுக்குள்ள அவங்க வந்தாங்க. அவங்களுக்கு காண்பிக்கிற நம்பிக்கை இதுதானா? முதலில் திமுக பற்றி சுதீஷிடம் துரைமுருகன் சொன்ன ரகசியத் தகவல்களுக்கான விளக்கத்தை துரைமுருகன் கொடுக்கட்டும். அதற்கு பிறகு முருகேசன் எதற்காக அங்கே சென்றார் என நான் சொல்கிறேன். சின்ன கம்யூனிகேசன் பிரச்னை அவ்வளவு தான்...

இரண்டு நாட்களாக எனக்கு தொண்டையில் பிரச்னை அதனால் எனக்கு என்ன நடந்தது எனத் தெரியாது. இதை பூதாகரமாக்கி தேமுதிகவை பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு சூழ்ச்சியாக திமுக கையாண்டிருக்கிறது. திமுக என்பதற்கான விளக்கம் தில்லு முல்லு கட்சி என ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். பெரிய மனிதர் என வீட்டுக்குப் போனால் வரச்சொல்லி விட்டு இப்படித்தான் கேவலப்படுத்துவீங்களா? வீட்டுக்கு வரவைத்து தான் அரசியல் ஆதாயத்தை தேடணுமா? இதைவிட அநாகரீகம் எங்காவது நடக்குமா?

 

துரைமுருகன் உளறி இருக்கிறார். மாறி மாறி பேசி வருகிறார். வந்தவர்களை யாரென்று தெரியாது என சொன்னவர், யார் வந்தாலும் வீட்டிற்குள் விட்டுவிடுவாரா? எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். அமைச்சராக இருந்திருக்கிறார். எங்கள் ஊரை சேர்ந்தவர்தான். அவரது ஊரான காட்பாடியில்தான் நானும் டிகிரி முடித்திருக்கிறேன். நாங்களும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த அளவுக்கு இழிவான அரசியல் நடத்துவார்களா என துரைமுருகனை நினைத்து வெட்கக்கேடாக கருதுகிறேன’’ என பிரேமலதா ஆத்திரப்பட்டுள்ளார்.