எந்த அரசியல் கட்சியில் இல்லை என்றாலும் கர்நாடக சட்டமன்றத் தேரிதலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில்  எழுத்தாளர் கௌரி லங்கேஷ்  சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ்ராஜ், பாஜகவுக்கு எதிராக கடுமையாக பேசினார்.

மேலும் தனது டுவிட்டர்  போன்ற சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி குறித்து கடுமையாக பதிவிட்டார். இதற்கு பாஜகவினரும் மிகக்டுமையாக எதிர் வினையாற்றினர். அப்போதிருந்தே பாஜகவுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை பிரகாஷ்ராஜ் மேற்கொணடு வருகிறார்.

இந்நிலையில் மங்களூரு பிரஸ் கிளப்பில் செய்தியாள்ர்களிடம் பேசிய  அவர், எதிர் வரும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், பிரச்சாரம் செய்யப் போவதில்லை என தெரிவித்தார்.

ஆனால், வகுப்புவாதத்தை வளர்த்து தேசத்தைஆபத்துக்கு உள்ளாக்கும் கட்சிக்குஎதிராக பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்தார். ஊழலைவிட பெரும் தீங்கு வகுப்புவாதம் என தெரிவித்த பிரகாஷ் ராஜ் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என கூறினார்.

எந்த கட்சியையும்  சாராதவன் என்கிற முறையில் ஆட்சியில் இருப்போர்களிடம் கேள்வி கேட்கிறேன். ஆனால் எதிர்த்து  கேள்வி கேட்போரை அவர்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் ஆளாக முத்திரை குத்துகிறார்கள் என பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.

ஒரு இந்து பெண்ணை கடத்தினால், 10 முஸ்லீம் பெண்களை கடத்திக் கொண்டுவர வேண்டும் என்று கூறும் யோகி ஆதித்யநாத்தையும், தலித்துகளை நாய்களுடன் ஒப்பிட்டுப்பேசும் மத்திய அமைச்சர் அனந்தகுமார்ஹெக்டேவையும் தலைவர்களாக பார்க்க முடியாது என பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.