பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், மிக குறைவாக வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரதமர் மோடியை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து, பிரச்சாரத்தின் போது சர்ச்சையை ஏற்படுத்தியவர் பிரகாஷ்ராஜ். மேலும் சமீபத்தில் டெல்லி தமிழ் மாணவர்களால் டெல்லி மாணவர்கள் வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்றும், தான் ஒரு கன்னடன் என்று கூறியிருந்தார்.

இது தமிழ் திரையுலக ரசிகர்களை மட்டும் இன்றி, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட இவர், 12 ,517 வாக்குகள் மட்டுமே பெற்று மிக மோசமான பின்னடைவை சந்தித்துள்ளார்.

இவர் போட்டியிட்ட தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வான் அர்ஷத் 2 .7 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நடிகர் பிரகாஷ் ராஜ், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகளில் பாதியை கூட பெற வில்லை. தற்போதைய நிலவரப்படி மன்சூர் அலிகான் 30 ,672 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.