prakash raj involved in political
தமிழகத்தில் நடிகர் கமலஹாசன் எப்படி ட்விட்டரில் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து அரசியலில் இறங்குகிறாரோ இதே பாணியில் கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் நோக்கத்தோடு செயல் படுவதாக கூறப்படுகிறது.
இவர் கர்நாடகாவில் நடந்த எழுத்தாளர் படுகொலையை கண்டித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் கர்னாடக மக்கள் பிரச்சனைகள் குறித்து தன்னுடைய ட்விட்டரில் கருத்துக்கள் பதிவிட்டார்.

இந்த பிரச்சனை பெரிய அளவில் வெடித்த போது, தேசிய விருதை திருப்பி தருகிறேன் என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின் தேசிய விருது தன்னுடைய உழைப்பிற்கு கிடைத்த கவுரவம், நான் ஏன் அதை திருப்பி தர வேண்டும் என்று கூறினார். அதை தொடர்ந்து தணிக்கைத்துறையை சாடினார். திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு அறிவு இல்லை என்று கருதி தணிக்கை துறை மூலம் நுழைவுத் தேர்வு நடத்த எண்ணு கிறீர்களா? என்று கண்டித்தார்.

தற்போது பிரகாஷ்ராஜின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் நோக்கதோடு உள்ளது என்றும் அவர் அரசியலில் குதிக்க தயாராகி வருவதாகவும் கன்னட நாளிதழில் கிசுகிசுக்கப்பட்டது வருகிறது.
