உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

சமீப காலமாக சிறுநீரக பிரச்சினைக்காக இவர் டயாலிசிஸ் சிகிச்சை  பெற்றுவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியனுக்கு 85 வயதாகிறது.

இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற தா.பாண்டியன். ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த அவர், "இயற்கை கருணாநிதியை அழைத்து செல்ல போராடுகிறது.. கருணாநிதி உயிருக்காக போராடவில்லை"என்றவர் வாழ்த்திவிட்டு சென்றார்.

இந்நிலையில், நேற்று காலை தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தா.பாண்டியனுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு மருத்துவமனைக்குச் சென்று தா.பாண்டியனை நேரில் சந்தித்து அவரிடம் உடல்நலம்  விசாரித்தார்.

தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் இந்த நேரத்திலும், மூத்த தலைவர் ஒருவர் உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருப்பதை பார்க்க வந்த தளபதி ஸ்டாலினை, அரசியல் தலைவர்கள் புகழ்ந்து வருகின்றனர். திமுக தொண்டர்களும் ச்டேளினின் இந்த செயலால் நெகிழ்கின்றனர்.