மே 18 - முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு #தமிழர்களின்பிரபாகரன்_திருமா என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் சீமானுடன் திருமாவளவன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. 

#தமிழர்களின்பிரபாகரன்_திருமா என்கிற ஹேஷ்டேக்கில் , ‘’நடுநிலையாளர் என்ற பெயரில் சாதிய வன்மத்துடன் பலர் தாக்கிய காரணமே திருமாவளவன் அண்ணன் திராவிடத்திடம் போனார் அவர் தமிழ்தேசியத்தில் பயணிக்க போலி தமிழ்தேசியம் ஒழிய வேண்டும் திருமா சீமான் இணைந்து பயணிக்க வேண்டும்’’ என்றும், போர் முடிந்து படுகொலைகள் முடிந்து பிணம் விழுந்து கிடக்கும் போவது போர் நிறுத்தமல்ல, நடந்தது கொலை விருந்து, அதில் கலந்து கொண்டு, மானாட மயிலாட காட்டி தமிழ்நாட்டை கொந்தளிக்காமல் பார்த்துக் கொண்டதற்கு சன்மானம் வாங்கப் போன திமுக சின்னமேளம் செற்றுக்கு எடுபிடியாகப் போனார் திருமாவளவன்’’ எனவும் கூறப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து மற்றொரு கருத்தை பகிர்ந்துள்ள நெட்டிசன் ஒருவர், ‘’ஈழத் தமிழர்களின் அழிவிற்கு துணை நின்ற காங்கிரஸ், திமுக வோடு பதவி சுகத்திற்காக அரசியல் கூட்டணி வைத்துக்கொண்டு உலகத் தமிழர்களை தூக்கிப் பிடிப்பதாக கூறும் வைகோ, திருமாவளவன் போன்றவர்களுக்கு தமிழ் உணர்வும், தமிழர்கள் நலனும் செத்துப் போய்விட்டதா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.