ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர், - காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, 45 வயதாகும்  இவருக்கும், 'பாகுபலி' படத்தில் நடித்த, பிரபாசுக்கும் தொடர்பு உள்ளதாக சித்தரித்து, இணையதளங்களில் சமீப காலமாக செய்திகள் உலவின.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, தன் கணவர் அனில் குமாருடன் சென்று, போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமாரை நேற்று சந்தித்தார்.

அப்போது, தன்னையும், நடிகர் பிரபாசையும் தொடர்பு படுத்தி, உள்நோக்கத்துடன் வதந்திகள் பரப்பப்படுவதாகவும், அதன் பின்னணியில், தெலுங்கு தேசம் கட்சியினர் இருப்பதாக சந்தேகிப்பதாவும், தக்க நடவடிக்கை எடுக்கும்படியும், அவர் வலியுறுத்தினார்.

பின் நிருபர்களை சந்தித்த ஷர்மிளா நாடாளுமனற  தேர்தல் வரவுள்ள நிலையில் என் புகழுக்கு களங்கம் விளைவிக்க, எதிரிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அதன் ஒருபகுதியாக, என்னையும், நடிகரையும் தொடர்புபடுத்தி வதந்திகள் பரப்புகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.