ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா' என்ற வாசகத்துடன் மதுரை முழுவதிலும் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.
கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா' என்ற வாசகத்துடன் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வெளியே வந்த சசிகலா திடீரென அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதனையடுத்து, சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ தினசரி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ், இபிஎஸ் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். இதனையடுத்து, சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிந்து நீக்கப்பட்டனர். சசிகலாவுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்ட அதிமுக அலுவலகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்படி இருந்தபோதிலும் சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்களிடம் பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தினமும் ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சசிகலாவின் ஆதரவாக ஆடியோ வெளியான நிலையில் தற்போது போஸ்டர்களை ஒட்டப்பட்டு வருகின்றனர். அதில், ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா' என்ற வாசகத்துடன் மதுரை முழுவதிலும் சுவரொட்டி ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சுஜாதா (எ) ஹர்ஷினி சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.
