பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு.. ஆதீனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்குமாறு தருமபுர ஆதீனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்குமாறு தருமபுர ஆதீனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சி அமைத்தது முதல் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது அது ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் சில நடவடிக்கைகள் ஒரு சிலரால் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்தது. எங்களின் ஆதீனங்கள் மற்றும் இந்து இயக்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தடையை நீக்கியுள்ளது.
இந்நிலையில் மே 22ஆம் தேதி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் பட்டினப் பிரவேசம் என்பது சட்டம் ஒழுங்கு சீர் கெட வாய்ப்பு உள்ளது எனவே, மத்திய பிரதேச நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜா சிவபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழக ஆளுநர் ஆர்.என ரவி தருமபுர ஆதீனத்திற்கு சென்று வந்தபின் சில அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, பின்னர் ஆதீனங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அதற்கான தடையை விலக்கியுள்ளது. ஆனால் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும் அன்று சில சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மட்டங்களிலும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் இந்துக்களின் மரபு பண்டிகை நடைமுறைகளில் தலையிட தமிழக அரசுக்கு உரிமை இல்லை எனக் கூறி, தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாதுகாப்பு கோரி இதுவரை ஆதீனத்திடமிருந்து எந்தவிதமான விண்ணப்பங்களும் வரவில்லை, பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறினார். இந்நிலையில் இந்த வழக்கில் தருமபுர ஆதீனத்தை எதிர் மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதிகள் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என தருமபுர ஆதீனத்திற்கு உத்தரவிட்டனர். அதேபோல் ஆதினத்தின் சார்பில் விண்ணப்பிக்கும் மனுவை பரிசீலித்து பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.