Asianet News TamilAsianet News Tamil

காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் , எடப்பாடியின் ஏமாற்று வேலை...?? பிச்சு உதறும் சுற்றுசூழல் ஆர்வலர்கள்...!!

இந்த முதலீட்டு மண்டலத்தின் கீழ் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 45 கிராமங்களில் உள்ள 57,000ஏக்கர் நிலப்பரப்பு அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

pooulagin nanbargal organization criticized carvery delta protection  plan by tamilnadu cm
Author
Chennai, First Published Feb 21, 2020, 11:41 AM IST

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்றும், தமிழ் நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டுமென்றும் மக்கள் கோரிவருகின்றனர். தமிழக முதல்வர் கடந்த வாரம் தலைவாசலில், மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வெளியிட்ட அறிவிப்பு  மக்களிடம் நம்பிக்கையை விதைத்தது. பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகளும் இந்த அறிவிப்பை வரவேற்றன. மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த தமிழக மக்களுக்கு அரசு இன்று தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ள சட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.  சட்டத்தில் உள்ள போதாமைகளை கவனப்படுத்த விரும்புகிறோம். இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்பாட்டிலுள்ள செயல்கள் அல்லது திட்டங்கள் பாதிக்கப்படாது என்று இந்த சட்டத்தின் 4(2)(1)a பிரிவு அறிவித்திருப்பது அமைச்சரின் நோக்கவுரைக்கு எதிராகவே உள்ளது. 

pooulagin nanbargal organization criticized carvery delta protection  plan by tamilnadu cm

அமைச்சரின் நோக்கவுரையில், "கடந்த சில ஆண்டுகளில் வேளாண்மை சாராத நடவடிக்கைகளால் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து மாநில உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகிவிட்டது" என்று தெரிவித்துள்ளார். அபப்டியெனில் நடைபெற்ற ஹைட்ரோகார்பன் திட்டங்களால் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த சட்டமே கொண்டு வரப்படுகிறதென்றால்  அந்த ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுவதை அனுமதிப்பது இந்த சட்டத்திற்கே புறம்பானது ஆகாதா?  ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தும் இயக்குனரகம் புதிதாக அறிவித்துள்ள கொள்கையின்படி(HELP) அனைத்து கிணறுகளும் (ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட) ஹைட்ரோகார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்கிணறுகளாக இருக்கும் கிணறுகள்கூட நாளை நீரியில் விரிசல் (fracking) முறைப்படி மீத்தேன் உள்ளீட்ட எந்த ஹைட்ரோகார்பனையும் எடுத்துக்கொள்ள முடியும் என்று ஆகிவிடும், 

pooulagin nanbargal organization criticized carvery delta protection  plan by tamilnadu cm

அதானால் செயல்படக்கூடிய கிணறுகளை கைவிடமாட்டோம் என்று அறிவித்திருப்பது எந்த பயனையும் தராது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் இந்த சட்டம் பாதிக்காது என்கிற சரத்து இருப்பது இந்த சட்டத்தின் தேவையை முழுமையாக நிராகரிக்கிறது. சென்ற ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 489 கிணறுகள் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் இறுதிசெய்யப்பட்டு வேதாந்தா நிறுவனத்திற்கும் ஓஎன்ஜிசி க்கும் ஒப்பந்தமாகிவுள்ளன. இந்த புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கின்ற 700 கிணறுகளையும் செயல்பட அனுமதித்தால் வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்கிற வார்த்தையே அர்த்தமற்றதாகிவிடும். தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள பெட்ரோலிய கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம்  (PCPIR) அறிவிப்பும் திரும்பப்பெறப்படவில்லை. 

pooulagin nanbargal organization criticized carvery delta protection  plan by tamilnadu cm

இந்த முதலீட்டு மண்டலத்தின் கீழ் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 45 கிராமங்களில் உள்ள 57,000ஏக்கர் நிலப்பரப்பு அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தின் ஒரு பகுதியாக கடலூரில் 50,000 கோடி முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், நாகபட்டினத்தினத்தில் 1 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட சிபிசில் நிறுவனத்தின் உற்பத்தித்திறனை 10 மில்லியன் டன்களாக உயர்த்தவும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பெட்ரோலிய நிறுவனங்களும் feeder ஆலைகளாகும், அதாவது இந்த ஆலைகளிலிருந்து வரக்கூடிய பொருட்களை வைத்து பல்வேறு பெட்ரோலிய மற்றும் ரசாயண பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமைக்கப்படும். இதுவும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற விஷயத்தையே தகர்த்துவிடும். என பூவுலகின் நண்பர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios