அதேபோல் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகளீர் உதவித்தொகை மாதம் ரூபாய் ஆயிரம் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக உள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதிநிலை சீரான பிறகு  வழங்கப்படும் என அறிவித்துள்ளார், கிராமப்புறங்களில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது 

எதிர்பார்த்த ஒரு சில அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தாலும், பெரிதும் எதிர்பார்த்தவைகள் நிதிநிலை அறிக்கையில் இல்லை என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி கருத்து தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சட்டமன்றத்தில் வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார் ஜிகே மணி இவ்வாறு கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 188 பக்கங்கள் கொண்ட 2022- 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய போதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகே பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் மறுத்தார். அதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்தார் பிடிஆர். 

அதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய ஒரு அறிவிப்பு செய்தார். பெண்கள் இளைஞர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேரும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு 7000 கோடி ரூபாய்க்கு மேல் வரி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். வரும் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக குறையும் என கூறினார். இந்நிலையில் திமுக அரசின் இந்த முதல் பட்ஜெட்டை கூட்டணிக் கட்சிகள் வரவேற்றுப் பாராட்டியுள்ளன.

இந்நிலையில் எதிர்க் கட்சிகளில் ஒன்றான பாமக எதிர்பார்த்த சில அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், பெரிதும் எதிர்பார்த்தவைகள் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது என அக்காட்சியின் எம்எல்ஏ ஜி.கே மணி கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- சமூக நீதி அனைத்து தளங்களிலும் நிலைநாட்டப்படும் எனவும், உக்ரேனில் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு மத்திய அரசு எடுத்து வரக்கூடிய உதவியோடு தமிழக அரசு உதவி செய்யும் என அறிவித்தார். ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனைகள் துவங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என்றார்.

அதேபோல் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகளீர் உதவித்தொகை மாதம் ரூபாய் ஆயிரம் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக உள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதிநிலை சீரான பிறகு வழங்கப்படும் என அறிவித்துள்ளார், கிராமப்புறங்களில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது, ஆசிரியரின் மிகவும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. 

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பு எதிர்பார்த்த நிலையில் அதுவும் பட்ஜெட்டில் இல்லை, காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் மத்திய அரசு அறிவித்திருந்தாலும் அரசு அதில் முனைப்பு காட்ட வேண்டும், இப்படி எதிர்பார்த்த சில அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தாலும் பெரிதும் எதிர்பார்த்தவைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என அவர் கூறினார்.