ஜூலை 18 சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானியக் குழு கோரிக்கையில் 16.7.2019அன்று பங்கேற்று பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா பேசுகையில்; கனத்த நெஞ்சத்தோடு, நீட் தேர்வினால் மனம் உடைந்து, சமூக நீதி மறுக்கப்பட்டதால், 2017 ஆம் ஆண்டு அரியலூர் அனிதா, 2018 ஆம் ஆண்டு திருச்சி சுபசிறீ, 2019 ஆம் ஆண்டு திருப்பூர் மோனிஷா, தஞ்சை வைஷ்யா, திருப்பூர் ரித்துசிறீ தங்களை மாய்த்துக் கொண்ட அந்தவளரிளம் பெண்களுக்கு என் கண்ணீர் மரியாதையை செலுத்தி, என் உரையைத் தொடங்குகிறேன் என ஆரம்பித்தார்.

நீட் பிரச்சினை,   நீட். இந்த நீட் மக்கள் நல்வாழ்வுத் துறை பிரச் சினையல்ல. இது ஒரு சமுதாயப் பிரச்சினை. இந்தத் தமிழ் மண், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தமிழ் மொழிக் காக இந்தி எதிர்ப்புக்காக உயிர் நீத்த மண் தமிழ் நாடு. சிறையில் அய்யா தாளமுத்து, அய்யா நட ராசன், தீக்குளித்து மாண்டவர்கள் கீழப் பழுவூர் சின்னசாமி, அய்யா சாரங்கபாணி, அய்யா விராலிமுத்து, அய்யா அரங்கநாதன், அய்யா சிவலிங்கம் போன்றோர் பிறந்த மண், இந்தத் தமிழ் மண். ஆனால், இன்றைக்கு நீட் தேர்வு வாயிலாக சமூக நீதி மறுதலிக்கப் பட்டதால், 5 உயிர்களை நாம் இழந்துள்ளோம். என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த நீட் என்பது, It is a bogus examination. இது ஒரு நவீன தீண்டாமை. 

தனியார் பயிற்சி மய்யங்கள் இதன்மூலம் கிட்டத்தட்ட ஆயிரக் கணக்கான, இலட்சக் கணக்கான கோடி ரூபாயை அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழ் வழிக்கேள்வித் தாளில் கிட்டத்தட்ட 100 கேள்விகளுக்கும் மேல் தவறான கேள்விகள் இடம் பெற்றி ருந்தன. அதற்காக நீதிமன்றத்தை நாடிய போது, உயர் நீதிமன்றமாகட்டும், உச்ச நீதிமன்றமாகட்டும் அதனைத் தள்ளுபடி செய்தது.

2006-ஆம் ஆண்டு கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் அப் பொழுதிருந்த UPA அரசாங்கம் வாயிலாக மத்தி யக்கல்வி நிறுவனங்க ளுக்கு பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டது. 

இன்றைக்கு வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல, நம் அனைவருக்கும் தெரியும். 15 சதவிகித All India quota-வில் நம் முடைய undergraduate M.B.B.S seat-ஐ கொடுக்கிறோம். அந்த சீட்டைக் கொடுத்தது, ஒதுக்கியது, 1984 அ.தி.மு.க. ஆட்சியில் என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அதில் நாம் பார்த்தோம் என்றால், மொத்தம் 3250 சீட்டுகள்; அதில் 15 சதவிகிதம் என்பது 490. அதில் 245 சீட்டுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் போக வேண்டும். அதே போல் முதுகலை இடங்களில் 1,758 சீட்டுகள் இருக்கின்றன. மத்திய அரசு வலுக்கட்டாயமாக 50 சதவிகித சீட்டுகளை நம்மிடமிருந்து வாங்கிவிட்டது. அதுவும் எப்பொழுது வாங்கப்பட்டது என்றால், உங்களுடைய ஆட்சியில் தான். 

2004 ஆம் ஆண்டில் 25 சதவிகிதமும், 2005 ஆம் ஆண்டில் 50 சதவிகிதமும் மத்திய அரசு பறித்துக்கொண்டு 440 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் செல்லவேண்டும். ஆனால் இது வரைக்கும் அனைத்திந்திய quotaவிலிருந்து  இது வரைக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த இட ஒதுக்கீடு வழங்கப்படாதது ஏன்? அதற்கு இந்த அரசு எந்த வகையிலாவது அழுத்தம் தந்ததா? என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். 

69% இடஒதுக்கீட்டை கலைஞர் அவர்கள் அப்போதைய பாரதப் பிரதமர் வி.பி.சிங்கோடு Mandal Commission-கு அடித்தளம் இட்டதே திராவிடர் கழகம் தான். இன்றைக்கு சமூக நீதி மறுக்கப்படுகிறது என் பது வேதனையான ஒரு விஷயம். இன்னொன்றும் சொல்கிறேன். இன்றைக்கு நீட் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகும்.

ஸ்டாலின், உறுப்பினர் அவர்கள் அவசரத்தில், உரையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்கிற காரணத்தினால், 27 சதவிகித இட ஒதுக்கீடு mandal Commission மூலமாக தலைவர் கலைஞர் பெற்றுத்தந்தார் என்று சொல்லியிருக்க வேண்டும். 69 சதவிகிதம் என்பதை நானே இந்த அவையில் பேசிப் பதிவு செய்திருக்கிறேன். அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அதைப் பதிவு செய்திருக்கிறேன். அதில் எந்த மாறுபாடும் கிடையாது.

டாக்டர் பூங்கோதை: முதன்முதலாக நாம் மருத்துவ சீட்டை நாம் அடமானம் வைத்தது, 1985இல் உங்கள் ஆட்சியில் என்பதை நான் இங்கே அழுத்தம் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். அதே போல், இளங்கலை,National Exit Exam-அய் நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. 

எங்கள் கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே இம் மா மன்றத்தில் பேசியதை போல், முன்னோடி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டைக் கைவிடதடுத்திட இவ்வரசு எல்லாவகையிலும் முயற்சி செய்திட வேண்டுமென்று தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மறைந்த எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் தந்தை பெரியார் வழியில், - பேரறிஞர் அண்ணா வழியில் அடுத்த நூறு தலைமுறைகளுக்கு பயன்படும் வகையில் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால், இன்றைய மத்திய அரசு, NEET, NOTTO புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு, தி.மு.க-வின் உயிர் மூச்சாக கருதப் படும் இனப்பற்று, மொழிப் பற்று, சுயமரியாதை, சமூக நீதி ஆகியவற்றை அழிக்க முயன்று வருகிறது என டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா பேசினார்.