Union Minister Pon.radhakrishnan Ask Investigation Commision About Jayalalitha case

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை போக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஹைட்ரோ கார்பன் போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் தங்கியள்ளார்.

இந்தச் சூழலில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை போக்க வேண்டும் என்றார்.

உடல் நலக்குறைவால் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி அகற்றப்பட்டதைப் பற்றி மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதா மரணம் குறித்து பன்னீர் செல்வமோ, எடப்பாடி பழனிச்சாமியோ ஏன் விசாரணை கமிஷனை அமைக்கவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் பரபர கேள்விகளை எழுப்பியுள்ளாரா்.

பொன்னாரின் இக்கேள்விகளுக்கு முன்னாள் முதல்வர் ஒ.பி.எஸ்.சும். இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?