Asianet News TamilAsianet News Tamil

ஓங்குகிறது ஓபிஎஸ் கை - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, 60 எம்எல்ஏக்கள் ஆதரவு

ponnusamy supports-ops
Author
First Published Feb 10, 2017, 1:23 PM IST


கடந்த 5ம் தேதி முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், 7ம் தேதி சசிகலாவுக்கு எதிராக பரபரப்பு புகார்களை செய்தியாளர்களிடம் கூறினார். இதையடுத்து அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதைதொடர்ந்து தினமும் ஏராளமானோர், ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு, அதிமுக எம்எல்ஏக்கள் 60 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பல எம்எல்ஏக்கள், விரைவில் தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள் என மூத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ponnusamy supports-ops

இந்நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டுக்கு இன்று காலை முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி சென்றார். அவருக்கு சால்வை அணிவித்த அவர், தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ponnusamy supports-ops

சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் எடுத்த முடிவை தமிழக மக்கள் வரவேற்கின்றனர். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் பன்னீர்செல்வம். அதிமுக எம்எல்ஏக்கள் சுதந்திரமாக முடிவு எடுத்தால் ஓ.பி.எஸ்ஸை ஆதரிப்பாளர்கள்.

ponnusamy supports-ops

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி, பாமக சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பிராக தேர்வு செய்யப்ப்பட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அமைச்சர் பொறுப்பும் அவருக்கு 

Follow Us:
Download App:
  • android
  • ios