அதிமுகவிற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் எனவும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியுள்ளார். 

அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதைப் போலத் தான் சாலையில் செல்பவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்துவது போல சசிகலா பயன்படுத்துகிறார். அதிமுகவிற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் எனவும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், ’’அதிமுகவிற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம். சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலாவையும் அவருடைய குடும்பத்தை வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்தார். சித்தாந்த ரீதியாக பாஜகவோடு ஒரு போதும் உடன்பட மாட்டோம்.

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும். அதிமுகவில் இரு கண்களாக இபிஎஸ், ஓபிஎஸ் இருக்கின்றனர். கட்சிக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது. அதிமுகவிலிருந்து அன்வர்ராஜாவை நீக்கியது சரியான முடிவு. ஒற்றை தலைமை வேண்டும் என யாரும் எதிர்பார்க்கவில்ல. அதிமுகவின் எதிர்காலம் செழிப்பாக இருக்கும். நகராட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.

முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு, பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு வழக்கில் கூட வெற்றி பெற முடியாது. அதிமுகவின் கட்சி கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதைப்போலத்தான் சாலையில் செல்பவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்துவது போல சசிகலா பயன்படுத்துகிறார்’’ என்று அவர் தெரிவித்தார். 

 இதே பொன்னையன் தான் சசிகலா தான் பொதுசெயலாளராக வரவேண்டும். அவர் தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றார். அதற்கு உதாரணமாக ஸ்ரீராம் சிட் பண்டை உதாரணம் காட்டி நாமினியாக சசிகலாவைத் தான் நியமித்திருக்கிறார் என்றார்.