அதிமுகவின் அமைப்பு செயலாளர்களில் ஒருவராக இருந்த பொன்னையன் திடீரென முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பொன்னையன் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகம் கிட்டத்தட்ட ஓ.பி.எஸ்ஸிடம் வந்து விட்டது என சொல்லலாம்.

மாலை 5.10 மணிக்கு வந்தது தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னையன் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவிக்க வந்த போது தொண்டர்கள் விசில் அடித்து கர ஒலி எழுப்பி வரவேற்றனர்.

சசிகா கூடாரத்தின் முக்கிய புள்ளியாக இருந்த பொன்னையன் தற்போது ஓ.பி.எஸ்ஸிடம் ஐக்கியமாகி இருப்பதால் அவரை போன்று இரட்டை மனநிலையில் இருக்கும் மேலும் பலர் பன்னீருக்கு ஆதரவு தெரிவிக்க வரக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.