பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று டிடிவி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.  

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியின் துனைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் கட்சியிலிருந்து நேற்று முன் தினம் விலகினார். ’அதிமுக - பாமக பேரக் கூட்டணி. முதல்வரை மோசமாக திட்டிவிட்டு இறுதியில் அவருடனே கூட்டணி வைத்துள்ளனர். அதிமுக திமுகவுடன் இனி எப்போதுமே கூட்டணி அமைக்க மாட்டேன் என கூறிவிட்டு இப்போது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

ஆகையால் பாமகவில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்தார். இந்நிலையில் இன்று அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். ஈரோடு பகுதியைச் சேர்ந்த பொங்கலூர் மணிகண்டன், கொங்குவேலார் சமூகத்தை சேர்ந்தவர். முன்பு கொங்கு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த இவர் பாமகவின் துணைத் தலைவராக இருந்தவர். 

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததை எதிர்த்து பாமகவில் இருந்து துணைத்தலைவராக பொறுப்பு வகித்த நடிகர் ரஞ்சித் கட்சியை விட்டு விலகி அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்து பாமகவில் இருந்து விலகியபொங்கலூர் மணிகண்டனும் அமமுகவில் இணைந்துள்ளார்.