பொங்கல் பரிசுத் தொகை 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 மாற்றம் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதை செயல்படுத்தும் வகையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர்  அலுவலர்களுக்கு வழங்கியுள்ள உத்தரவில், பொங்கல் பரிசு சழற்ச்சி முறையில் வழங்க வேண்டும், நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 

முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் பிற்பகலில் 100 குடும்பங்களுக்கும் வழங்கும் நாள் நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வரும் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் முடிய வீடுதோறும் சென்று நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் வழங்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் பொருட்கள் பெற குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-1-2019 அன்று வழங்கப்பட வேண்டும், பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் ரொக்கத் தொகை 2500-ம் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஒப்புதல் பெற வேண்டும். 

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்தி கடைகளில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வருகின்ற மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆண்களை தனியாகவும், பெண்கள் தனியாகவும் நிற்க வைக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி பொருட்கள் பெற வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  பொங்கல் தொகுப்பு மற்றும், 2500 ரூபாய் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்  வினியோகம் தொடங்கியுள்ளது. 

இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. டோக்கன்களை டிசம்பர் 31-ஆம் தேதி வரை வீடு தேடி சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்க உள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 120 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 50 கிராம் ஏலக்காய்யும் தரப்படும். அதேநேரத்தில் 2,500 ரூபாயும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.