தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பேசத் தொடங்கிய உடன் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறுக்கிட்டுப் பேசினார்.

பின்னர் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. முதலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழில் பேசத் தொடங்கினார்.

அப்போது தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்தில்  மட்டும் இந்த திட்டம் செய்லபடுத்தப் படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கவர்னர் உரையில் பல புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கல் பரிசு அறிவிப்பு பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.