பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கி வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்தாண்டுக்கான இத்திட்டத்தை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கடந்த நவம்பர் 29-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்தப் பொங்கல் பரிசு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 

பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள் என  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த பொங்கல் பரிசு தொகுப்பை  வரும் 21ஆம் தேதி வரை  பெற்றுக் கொள்ளலாம் என  தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.