கன்னியாகுமரியில் பாஜக சார்பில் 2ம் கட்டமாக வந்து இறங்கிய நிவாரண பொருட்களை வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஒழுங்குபடுத்தும் பணியில்  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.  அதன் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தும் தவிப்பதால் பல்வேறு இடங்களில் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். 

இவர்களுக்கு அரசியல் கட்சியினர் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். ஏற்கனவே முதற்கட்ட தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

இந்நிலையில்,  பாஜக சார்பில் 2ம் கட்டமாக வந்து இறங்கிய நிவாரண பொருட்களை வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஒழுங்குபடுத்தும் பணியில் தனது தொண்டர்களுடன் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போதிலும், அதை எதையும் கருத்தில் கொள்ளாமல்  உணவு நில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கியும், இலவச நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்றை பெற்றுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் என் தொகுதி மக்களுக்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள் என்ற தோணியில் எடுத்துக்கட்டிக் கொண்டு வேலை பார்க்கும் பொன்.ராதா கிருஷ்ணனின்  இந்த புகைப்படம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.