அடுத்த சந்தேகத்தை கிளப்பிய பொன். ராதாகிருஷ்ணன்...! இப்பவே இப்படின்னா.. அப்ப எப்படி  இருந்து இருக்கும்..? 

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி என்ற பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பொன் ராதாகிருஷ்ணன். இந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த பொன் ராதாகிருஷ்ணன் நீட் தேர்வு குறித்து பதிலளித்தார்.

நீட் தேர்வு விதிமுறைகளை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்றும், அதிக செல்வாக்கு படைத்த குடும்பங்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு முன்னதாக அதாவது நீட் கொண்டு வருவதற்கு முன்னதாக, வேறு எப்படி எல்லாம் முறைகேடு நடந்து உள்ளதோ? என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது தற்போதைய ஆள்மாறாட்டம் விவகாரம் என கேள்வி எழுப்பி உள்ளார் பொன்ராதாகிருஷ்ணன்.

எனவே தற்போது நடைபெற்றுள்ள இந்த குற்றங்களை கருத்தில் கொண்டு ,இனி வரும் காலங்களில் இது போன்று நிகழாமல் இருக்க நீட் தேர்வு கெடுபிடிகளை கடுமையாக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அதிக எதிர்ப்பு கிளம்பி  இருந்தும் பின்னர் அதனையும் மீறி நீட்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்போது நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில் செல்வாக்கு மிகுந்த ஒரு மருத்துவ குடும்பமே தன் மகனுக்காக ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை எழுத வைத்து, சீட் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வைத்து பார்க்கும் போது நீட் இல்லா காலங்களில் எத்தனை பேர் முறைகேடாக மருத்துவப் படிப்பு முடித்து இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுப்பியுள்ளது.