சர்கார்’ பட ஆடியோ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ‘நான் முதல்வரானால்’ என்று ஸ்டேட்மெண்ட் விட்டது ஆளும் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

இது குறித்து தனது கருத்தை இன்று காரசாரமாக வெளியிட்ட மத்திய அமைச்சர் பொன்னார், ‘தலைவன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். நான் முதல்வரானால், முதல்வர் போல நடிக்க மாட்டேன். பதவிக்கேற்ப நடந்து கொள்வேன். ஊழலை ஒழிப்பேன் என்று நடிகர் விஜய் சரமாரியாக பேசியுள்ளார்.

இப்படியெல்லாம் பேசினால் அனைவரும் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பார்கள் என்று விஜய் நினைப்பாரால் அது முற்றிலும் தவறு. உண்மையான அக்கறையுடன் அவர் அரசியல் பேச விரும்பினால், ஊழலைப்பற்றி பேசும்போது ‘தில்’ இருந்தால் அவர் ஊழல்வாதிகளின் பெயரை வெளியிட வேண்டும். அப்படி வெளியிட முடியாத பட்சத்தில் போகிறபோக்கில் விளம்பரத்துக்காக அரசியல் பேசுவதை நிறுத்தவேண்டும்.

ஒருவேளை அப்படி ஊழல்வாதிகளின் பெயரை அவர் வெளியிட்டால் அவரை மாலை போட்டு வரவேற்பேன்.

அனைவராலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவாக ஆக முடியாது; மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்தான். புறம்போக்கு நிலம் போல நாதியில்லாத நிலையில் தமிழ்நாடு உள்ளது என்கிற சிந்தனையுடன் நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது.

‘அங்க அடிச்சா இங்க வலிக்கும் என்பார்களே அதுபோல் அ.தி.மு.க.வை அடித்தால் இந்த பி.ஜே.பி.க்காரருக்கு ஏன் வலிக்குதாம்?