தமிழக   விவசாயிகள்  பல்வேறு   கோரிக்கைகளை  வலியுறுத்தி  தொடர்ந்து 3 2  ஆவது நாளாக  டெல்லி ஜந்தர் மாந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வித விதமான  முறையில்,  தினந்தோறும்  போராட்டம் நடை வரும் விவசாயிகள் பிரச்னை  கூட கேட்க முடியாத அளவிற்கு தான்   மத்திய  அரசு  உள்ளது . இது வரை எந்த  கோரிக்கைகளுக்கும்    செவி  சாய்க்க மறுத்த    மத்திய  அரசை  கண்டித்து  தற்போது  விவசாயிகள்  உச்சகட்ட  போராட்டத்தை  நடத்த  உள்ளனர். அதுவும்   இரவு நேரத்தில் விவசாயிகள்  தங்கள் கழுத்தை தாங்களே  அறுத்துக்கொள்ள  திட்டமிட்டு  இருப்பதாக  விவசாயிகள்  தெரிவித்துள்ளனர்.

இந்த  தகவலை  மத்திய இணை அமைச்சர் பொன்னர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தன்னால்    ஜீரணித்து கொள்ள முடியவில்ல்லை என்றும் , விவசாய பெருமக்கள் இது போன்ற விபரீத  முடிவை   எடுத்திருப்பது  தன்னால்  தாங்கிக் கொள்ள  முடிய வில்லை  என்றும் குறிபிட்டுள்ளார்.

இந்த தகவலால் தற்போது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப் படுகிறது.அரசியல்  வட்டாரத்தில்   ஒரு விதமான பரபரப்பும் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது