சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

அப்போது பேசிய அவர்,
மத்திய அரசால் தேசிய நதிநீர் கட்டுப்பாடு மசோதா கொண்டு வர இருக்கிறது. அதனுடைய அறிக்கையை இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை என்றும், ஆனால் நிச்சயமாக காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்யாது என தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தன்னுடைய கட்சியின் தலைவர்களிடம் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடலாமா என்று கருத்து கேட்டது வரவேற்கத்தக்கது.
அனைத்து கட்சிகளும் தங்களுடைய சுய பலத்தை நிரூபிக்க உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என பொன்.ராதா தெரிவித்தார்.
மேலும், தமிழக மக்கள் நலன் கருதி கண்டிப்பாக குளச்சல் துறைமுகம் கொண்டு வரப்படும் என பொன்.ராதா தெரிவித்தார்.
