தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை திட்டத்தில் இணைந்து செயல்பட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும், சென்னை - மதுரை இரட்டை ரயில் பாதை பணி இந்த நிதியாண்டுக்குள் முடிவடையும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை - மதுரை இரட்டை ரயில் பாதை பணி இந்த நிதியாண்டுக்குள் நிறைவடையும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை முதல் மதுரை வரை 497 கி.மீ. தொலைவுக்கு ஒற்றை வழி இருப்புப்பாதை இருந்தது. இதை இரட்டை வழிப்பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்தன.

திருச்சி-சென்னை இடையிலான இரட்டை வழிப்பாதையின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்த  நிலையில், பணிகள் அனைத்தும் முடிந்து, பயன்பாட்டுக்கு தயாராக இருக்கிறது. இதற்கிடையே திருச்சி-திண்டுக்கல் இடையிலான 20 கி.மீ. பாதையில் மட்டும் பணிகள் தற்போது நடந்து வருவதால், அந்த பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்து விடும்.

அவ்வாறு டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிந்து விட்டால், வழக்கமாக இந்த பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் வேகத்தை அதிகரிக்கவும், அதிகமான ரெயில்களை இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடமதுரை கிழக்கே உள்ள ரயில் பாதைகளை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் மத்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை திட்டத்தில் இணைந்து செயல்பட தமிழக அரசு முன் வர வேண்டும் என்றார். சென்னை - மதுரை இரட்டை ரயில் பாதை பணி இந்த நிதியாண்டுக்குள் முடிவடையும்.

தமிழக அரசு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக நிதிகளை ஒதுக்கி உள்ளது. இது தமிழகத்தை தத்தெடுத்ததுபோல் உள்ளது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.