வேண்டாம்..விட்டுடு.. ஏதோ கூட்டணி தர்மத்துக்காக அமைதியா இருக்கேன்..! சீரும் பொன் ராதா..! பாயும் ஜெயக்குமார்..! 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையிலும் கூலாக பதில் கூறும் ஜெயக்குமார், எப்போதும் எதுகை மோனையோடு சற்று சுவாரஸ்யமாக பேசுவது வழக்கம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. கூட்டணியில் இருக்கக்கூடிய பொன்.ராதாகிருஷ்ணன் 'தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது.பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது என சொல்ல....

அமைச்சர் ஜெயக்குமாரோ... அவர் அப்பப்ப இப்படித்தான் எதையோ பேசிகிட்டு இருப்பார்... ஆனால் நல்லா தான் இருந்தார்... இருந்தாலும் அவர் பேச்சை எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.. அரசு தன் கடமையை சரிவர செய்கிறது' என கவுண்டர் கொடுத்துவிட்டார்.

   

இந்த நிலையில், சமீபத்தில் கூட பொங்கல் தினத்தன்று அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "இன்று ஜல்லிக்கட்டு நாளை அரசியலில் மல்லு கட்டு" என தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார்  பொன்.ராதா குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.அப்போது "ஜெயக்குமார் என்னை பற்றி சில விஷயங்கள் பேசி உள்ளார்... கூட்டணி தர்மத்தால் மௌனமாக இருக்கிறேன். ரஜினியை எதிர்த்தால் தான் அரசியல் செய்ய முடியும் என எதிர்பார்க்கிறார்கள்" என ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பிடிபட்ட பயங்கரவாதிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் என்றும் குறிப்பிட்டு பேசி உள்ளார். ஆக மொத்தத்தில் கூட்டணி கட்சியில் இருந்துகொண்டே எலியும்  புலியாக செயல்பட்டு, ஏதோ கூட்டணி தர்மத்துக்காக அமைதியா இருக்கேன் என பொன்.ராதா சீறுவதும், அமைச்சர் ஜெயக்குமார் பாய்வதுமாக செய்கிறது தமிழக அரசியல் களம் .